/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சேதமான விளைபொருட்கள் வியாபாரிகளுக்கு நிவாரணம்
/
சேதமான விளைபொருட்கள் வியாபாரிகளுக்கு நிவாரணம்
ADDED : மே 30, 2025 11:55 PM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுாரில் 'பெஞ்சல்' புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு, ரூ. 3.12 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், பெஞ்சல் புயல் வெள்ளத்தில் வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்திருந்த விளைபொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தன.
இவர்களுக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் 44 பேருக்கு, 3 கோடியே 12 லட்சத்து 68 ஆயிரத்தி 466 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.பி., அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, திருக்கோவிலுார் நகராட்சி சேர்மன் முருகன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி, பேரூராட்சி தலைவர் அன்பு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், வேளாண்துறை இணை இயக்குனர் ஈஸ்வரன், விழுப்புரம் விற்பனை குழு செயலாளர் சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.