/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் முதல்வர் நிவாரணம் வழங்கல்
/
முன்னாள் முதல்வர் நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 07, 2024 06:43 AM

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதித்தி மக்களுக்கு முன்னாள் முதல்வர் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நிவாரண பொருட்கள் வழங்கினார்.
மூங்கில்துறைப்பட்டு, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதியில் வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
முதல் கட்டமாக மாவட்ட செயலாளர் தலைமையில் நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக முன்னாள் முதல்வர், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு அரிசி, காய்கறிகள், புடவை, வேட்டி என நிவாரண பொருட்களை வழங்கினார்.
மாவட்ட செயலாளர் குமரகுரு, ஒன்றிய செயலாளர் அரசு இளந்தேவன், அவைத் தலைவர் அண்ணாமலை நிர்வாகிகள் திருமால், பவுல்ராஜ், தமிழ்ச்செல்வன், சேகர், ராமச்சந்திரன், அர்ஜூனன், முகமதுசித்திக், ஜாகிர் உசேன், செல்வராஜ், கோகுல் ராம், ஆரோக்கிய லியோ, ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.