/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் தேன் கூடு அகற்றம்
/
அரசு பள்ளியில் தேன் கூடு அகற்றம்
ADDED : ஏப் 23, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே, அரசு பள்ளி வளாகத்தில் கட்டியிருந்த தேன் கூட்டை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
சங்கராபுரம் அடுத்த பொய்குணத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.
அங்கு நேற்று முன்தினம் தேனீக்கள் கொட்டி, 20,க்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினர். இந்நிலையில், நேற்று தீயணைப்பு அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் வீரர்கள், பள்ளி வளாகத்தில் தீப்பந்தம் மூலம் தேனீக்களை அகற்றினர்.