ADDED : அக் 14, 2024 09:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை கடை உரிமையாளர்களே அகற்றினர்.
உளுந்துார்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனால் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டுக் கெள்ளப்பட்டது.
அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்கள் அவர்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.