/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கரடிசித்துார் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
கரடிசித்துார் கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : அக் 05, 2024 11:35 PM
கச்சிராயபாளையம்: கரடிசித்துார் கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் கடைமடைக்குச் செல்லும் கோமுகி அணை பாசன வாய்க்காலை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இதனால் கோமுகி அணை கடைமடை பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
கலெக்டரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில் கோமுகி அணை உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வளார் பாபுகணபதி, கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலையில் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர்.