/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணம்பூண்டி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
மணம்பூண்டி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : நவ 14, 2024 06:09 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டி, நான்கு முனை சந்திப்பு ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி, நான்கு முனை சந்திப்பில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் அவ்வழியாக பயணிக்கும் கரும்பு டிராக்டர்கள் உள்ளிட்டவை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியது. இதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக துரிஞ்சலாற்று பாலத்தில் இருந்து, நான்கு முனை சந்திப்பு பகுதி முழுவதும் இருந்த ஆக்கிரமிப்பை ஜேசிபி மூலம் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் விஜயலட்சுமி, விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா தலைமையில், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீத், சப் இன்ஸ்பெக்டர் குமரகுருபரன் உள்ளிட்ட 50க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாசில்தார் கிருஷ்ண தாஸ் மற்றும் நில அளவை துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.