/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதியின்றி நடப்பட்ட கொடி கம்பம் அகற்றம்
/
அனுமதியின்றி நடப்பட்ட கொடி கம்பம் அகற்றம்
ADDED : ஜன 14, 2024 05:06 AM
கள்ளக்குறிச்சி : அ.வாசுதேவனுார் கிராமத்தில் அனுமதியின்றி நடப்பட்ட கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றினர்.
சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுார் கிராமத்தில் அரசு இடத்தில் அனுமதியின்றி மலைக்குறவன் பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டது.
தகவலறிந்த வி.ஏ.ஓ., மோகன்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று கம்பத்தை அகற்றுமாறு சங்க நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். ஆனால், சங்க நிர்வாகிகள் கொடி கம்பத்தை அகற்ற மறுத்தனர்.
தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொடிக்கம்பத்தை அகற்றினர்.
இது குறித்து வி.ஏ.ஓ., மோகன்குமார் அளித்த புகாரின் பேரில், சங்க செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சிலர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

