/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கட்சிக் கொடிகள் பேனர்கள் அகற்றம்
/
கட்சிக் கொடிகள் பேனர்கள் அகற்றம்
ADDED : மார் 18, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் நகர பகுதி 18 வார்டுகளில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசியல் கட்சி கொடிகள், பேனர்கள் அகற்றப்பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமார் உத்தரவின்பேரில், சின்னசேலம் பேரூராட்சி நிர்வாக தலைவர் மோகனரங்கம் மேற்பார்வையில் நகரபகுதியில் உள்ள 18 வார்டுகளிலும், அரசியல் கட்சிக் கொடிகள், பேனர்கள் நேற்று அகற்றும் பணி நடந்தது.
பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

