/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துருகம் சாலையோரம் தேங்கிய மழைநீர் அகற்றம்
/
துருகம் சாலையோரம் தேங்கிய மழைநீர் அகற்றம்
ADDED : மார் 22, 2025 08:54 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் துருகம் சாலையோரம் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சியில் அபிராமி அபார்ட்மென்ட் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி இடங்களில் பல நாட்களாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் விடும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் நகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ள உள்ள இடங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரி தெரிவித்தனர்.