/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுவங்கூர் காலனி பகுதியில் குடிநீர் தொட்டி கட்ட கோரிக்கை
/
சிறுவங்கூர் காலனி பகுதியில் குடிநீர் தொட்டி கட்ட கோரிக்கை
சிறுவங்கூர் காலனி பகுதியில் குடிநீர் தொட்டி கட்ட கோரிக்கை
சிறுவங்கூர் காலனி பகுதியில் குடிநீர் தொட்டி கட்ட கோரிக்கை
ADDED : செப் 29, 2024 06:38 AM

கள்ளக்குறிச்சி: சிறுவங்கூர் காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக பள்ளம்ே தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் காலனி பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர்.
இப்பகுதியைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, பழுதடைந்ததால் இடித்துவிட்டு, புதிதாக 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட மாற்று இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.
ஆனால் சில தனி நபர்கள் எதிர்ப்பு காரணமாக பணிகள் துவங்க காலதாமதமாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குடியிருப்புகளுக்கு இடையே சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளம் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
பருவமழைக் காலம் துவங்க உள்ள நிலையில், இப்பகுதியில் சிறுவர்கள், கால்நடைகள் பள்ளத்தில் விழுந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.