/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீசாருக்கு பழச்சாறு வழங்க கோரிக்கை
/
போலீசாருக்கு பழச்சாறு வழங்க கோரிக்கை
ADDED : ஏப் 02, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது வெப்பநிலை, 100 டிகிரியை எட்டிவிடும் நிலையில் உள்ளது. தொடர்ந்து கோடையின் உச்சம் துவங்கி, அக்னி நட்சத்திர காலங்களில் வெளியே தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படும்.இந்நிலையில் கடுமையான வெயிலின் உச்சத்தில் சாலைகளின் நடுவே நின்றுகொண்டு பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு உதவிடும் வகையில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் தினமும் அவர்களுக்கு பழச்சாறு வழங்கும் வழங்கும் சேவையை துவங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

