தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆபத்தான மின்கம்பங்கள் மாற்றி அமைக்க கோரிக்கை

ஆபத்தான மின்கம்பங்கள் மாற்றி அமைக்க கோரிக்கை

ஆபத்தான மின்கம்பங்கள் மாற்றி அமைக்க கோரிக்கை


ADDED : ஜூன் 19, 2025 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 07:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார : திருக்கோவிலுார், மேலவீதியில் சாலையை ஆக்கிரமித்து ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களை மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திருக்கோவிலுாரில், பஸ் நிலையத்தில் துவங்கி வடக்கு வீதி, மேல வீதி, ஏரிக்கரை மூலை வழியாக சந்தப்பேட்டை வரை கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன்பு சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டது.

இதற்காக சாலையோரம் இருக்கும் மின் கம்பங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் மின்துறைக்கு பணம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மின்துறை அதிகாரிகளும் புதிய மின் கம்பத்தை அமைத்தனர். ஆனால் அதன் வழியே, மின் வினியோகம் செய்யப்படுவதில்லை.

பழைய மின் கம்பங்களை அகற்றாமல் அதன் வழியே தான் இன்னமும் மின் இணைப்பு சென்று கொண்டிருக்கிறது. பழைய கம்பங்கள் பெரும்பாலும் இரும்பலானவை என்பதால் துருப்பிடித்து சாய்ந்து விடும் நிலையில் உள்ளன.

இதனை 'வெல்டு' வைத்து சீரமைக்கும் பணியை மின் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், புதிதாக நடப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக நின்று கொண்டிருக்கும் மின் கம்பத்தில் மின் கம்பியை மாற்றி மின்சாரம் வினியோகிக்கும் பணியை மேற்கொள்ளவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பழைய மின் கம்பங்கள் முறிந்து விழும் ஆபத்தும் உள்ளன. இதனை உணர்ந்து இனியாவது மின்துறை, புதிதாக நடப்பட்ட மின் கம்பத்தில் மின் இணைப்பை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us