தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 'ஏர் ஹாரன்' பயன்பாடு கட்டுப்படுத்த கோரிக்கை

 'ஏர் ஹாரன்' பயன்பாடு கட்டுப்படுத்த கோரிக்கை

 'ஏர் ஹாரன்' பயன்பாடு கட்டுப்படுத்த கோரிக்கை


ADDED : டிச 19, 2025 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாகனங்களில் அதிக சப்தத்துடன் கூடிய 'ஏர் ஹார்ன்' பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் எந்நேரமும் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. ஆட்டோ, பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயங்குகிறது.

கள்ளக்குறிச்சியில் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக இரைச்சலுடன் கூடிய 'ஏர் ஹாரன்கள்' பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலையோர மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏர் ஹாரன் அதிகளவில் பயன்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை பொதுமக்கள் வாகன ஓட்டுனர்களிடம் கேட்கும் போது அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகில் மருத்துவமனைகள், வங்கிகள், கோர்ட்டுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கி வருகின்றன.

நகரில் நுழைவதிலிருந்து பஸ் ஸ்டாண்டு வரை 2 கி.மீ., தொலைவிற்கும் மேல் அதிக சப்தத்துடன் 'ஏர் ஹாரன்களை' அடித்துக்கொண்டே செல்வதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, 'ஏர் ஹாரன்' பயன்பாட்டினை முற்றிலும் தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us