/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவை மீண்டும் இயக்க கோரிக்கை
/
நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவை மீண்டும் இயக்க கோரிக்கை
நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவை மீண்டும் இயக்க கோரிக்கை
நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவை மீண்டும் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 15, 2025 10:55 PM
ரிஷிவந்தியம், ; வாணாபுரத்தில் இருந்து மையனுார் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்கிடவும், கள்ளக்குறிச்சியில் இருந்து வரும் பஸ்களின் வழித்தடத்தை நீட்டிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரத்தில் தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலகங்கள், வங்கிகள், போலீஸ் ஸ்டேஷன், வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், பழைய சிறுவங்கூர், தொண்டனந்தல், மையனுார், பெரியபகண்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் வாணாபுரத்திற்கு செல்கின்றனர்.
இதில், திருக்கோவிலுாரில் இருந்து பகண்டைகூட்ரோடு வழித்தடத்தில் மையனுார் வரை இயக்கப்பட்ட தடம் எண். 21 என்ற அரசு பஸ் கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது.
தினமும் 2 முறை மையனுாருக்கு வந்து செல்லும் பஸ் தற்போது வராததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, மதியம் 1:00 மணியில் இருந்து மாலை 5:20 வரை மையனுாரில் இருந்து வாணாபுரத்திற்கு செல்ல பஸ் இல்லை. அதேபோல், இரவு 7:30 மணிக்கு மேல் வாணாபுரத்தில் இருந்து மையனுாருக்கு செல்ல பஸ் இல்லாததால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஊருக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தடம் எண்.21 அரசு பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும். அதேபோல், கள்ளக்குறிச்சி இருந்து மதியம் 2:10, மாலை 4:10 மற்றும் இரவு 7:00 மணியளவில் மையனுாருக்கு வரும் தடம் எண்.22ஏ, 43ஏ என்ற அரசு பஸ்களை பகண்டைகூட்ரோடு வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.