/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 21, 2025 05:40 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரே புதிய பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராம எல்லையில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனை எதிரே, பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. அதனால் அங்கு வரும் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மர நிழலிலும், மண்தரையிலும் அமர்ந்திருக்கும் நிலை உள்ளது.
இதனால், அங்கு பயணியர் நிழற்குடை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.