/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பஸ்களுக்கு போக்குவரத்து தகுதி சான்று பிரிவு துவங்க கோரிக்கை
/
அரசு பஸ்களுக்கு போக்குவரத்து தகுதி சான்று பிரிவு துவங்க கோரிக்கை
அரசு பஸ்களுக்கு போக்குவரத்து தகுதி சான்று பிரிவு துவங்க கோரிக்கை
அரசு பஸ்களுக்கு போக்குவரத்து தகுதி சான்று பிரிவு துவங்க கோரிக்கை
ADDED : மார் 19, 2025 11:55 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசு பஸ்களை புதுப்பிப்பதற்கான, போக்குவரத்து தகுதி சான்று பிரிவு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 இடங்களில் அரசு டிப்போக்கள் உள்ளன. இங்கிருந்து கிராமங்கள் மற்றும் வெளிமாவட்டத்திற்கு , 150க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து தகுதி சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இதற்கான தகுதி சான்று பிரிவு உளுந்துார்பேட்டையில் இயங்கி வருகிறது.
பஸ்ஸில் சிறிய பழுதுகள், அந்தந்த டிப்போக்களிலேயே சரி செய்யப்படும். பெரிய அளவில் பழுது மற்றும் புதிய பெயிண்ட் அடிக்க, உளுந்துார்பேட்டைக்கு செல்ல வேண்டும்.
அங்கு பழுது பணிகள் முடிந்த பிறகு, வெள்ளையூர், ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஓட்டி செல்லப்பட்டு, அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனைக்கு பின் தகுதி சான்று வழங்குவார். தொடர்ந்து, பஸ்கள் அந்தந்த டிப்போக்களுக்கு ஓட்டி செல்லப்படும்.
இதில், சின்னசேலம் அரசு டிப்போ பஸ்கள் உளுந்துார்பேட்டைக்கு சென்று வர, 126 கி.மீ; சங்கராபுரம் டிப்போ பஸ்கள் 132 கி.மீ; கள்ளக்குறிச்சி டிப்போ பஸ்கள் 96 கி.மீ., துாரம் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் டீசல் விரையமாகி, போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் நஷ்டம் ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் டோல்கேட் இருப்பதால், சுங்க கட்டணமும் செலுத்த வேண்டும்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கள்ளக்குறிச்சியில் வாகன தகுதி சான்று பிரிவு அமைப்பதன் மூலம், டீசல் செலவையும், சுங்க கட்டணத்தையும் தவிர்க்கலாம். புதுப்பிக்கப்பட்ட அரசு பஸ்களை கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திலேயே சோதனைக்கு உட்படுத்தலாம். போக்குவரத்து கழகத்திற்கான செலவு குறையும்,' என்றனர்.