/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீஸ்காரர் வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு
/
போலீஸ்காரர் வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு
ADDED : மார் 17, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் போலீஸ்காரரின் வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீள சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
உளுந்துார்பேட்டை, அம்மாபொன் நகரைச் சேர்ந்தவர் மணவாளன். போலீஸ்காரர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டிற்குள் நேற்று காலை 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

