ADDED : ஜன 22, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் மயங்கிக் கிடந்த மயிலை தீயணைப்பு துறையினர் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உடலில் காயத்துடன் பெண் மயில் மயங்கிக் கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) ரமேஷ்குமார் மயிலை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.