/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்று இடத்தில் நீர்தேக்க தொட்டி; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
/
மாற்று இடத்தில் நீர்தேக்க தொட்டி; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
மாற்று இடத்தில் நீர்தேக்க தொட்டி; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
மாற்று இடத்தில் நீர்தேக்க தொட்டி; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
ADDED : அக் 14, 2024 09:43 PM

கள்ளக்குறிச்சி : மாதவச்சேரி காமராஜர் நகருக்கு ஒதுக்கிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, வேறு இடத்தில் அமைப்பதாக கலெக்டரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனு:
கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி கிராமம் காமராஜ் நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இப்பகுதியில் அவ்வப்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் காமராஜர் நகர் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க ஒதுக்கப்பட்டது. ஆனால் சிலரது சதியால், காமராஜர் நகர் பகுதியில் அமைய வேண்டிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, பால்ராம்பட்டு செல்லும் சாலையோரம் புதியதாக போடப்படும் வீட்டு மனைகளின் அருகே அமைக்கப்பட்டு வருகிறது.
எனவே, காமராஜர் நர் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீண்டும் ஒதுக்கி அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.