/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை கள்ளக்குறிச்சியில் கலெக்டர் வெளியீடு
/
வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை கள்ளக்குறிச்சியில் கலெக்டர் வெளியீடு
வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை கள்ளக்குறிச்சியில் கலெக்டர் வெளியீடு
வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை கள்ளக்குறிச்சியில் கலெக்டர் வெளியீடு
ADDED : ஜன 07, 2024 05:56 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டிற்கு 12 ஆயிரத்து 85 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கல்விக் கடன், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி, தனிநபர் உள்ளிட்ட கடன்கள் குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து கடன் வழங்க வேண்டும்.
ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன்களுக்கு உரிய காலத்தில் தவணை தொகைகளை பெற்று கடன் சுழற்சிக்கு வசதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டு விவசாய கடன் 10 ஆயிரத்து 143 கோடி ரூபாய். தொழிற்கடன் 868 கோடியே 70 லட்சம் ரூபாய். கல்விக் கடன் 165 கோடி ரூபாய் மற்றும் இதர கடன் 908 கோடி ரூபாய் என மொத்தம் கடன் இலக்கு 12 ஆயிரத்து 85 கோடியே 87 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2024-25ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் வெளியிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், ரிசர்வ் வங்கியின் மாவட்ட முன்னோடி அலுவலர் சொர்ணாம்பாள், நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாலமுருகன் மற்றும் அனைத்து வங்கி பொது மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.