/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் சிலை தயாரிப்பு கட்டுப்பாடுகள் விதிப்பு
/
விநாயகர் சிலை தயாரிப்பு கட்டுப்பாடுகள் விதிப்பு
ADDED : ஆக 19, 2025 07:33 AM
விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் நீர் நிலைககளில் சிலைகள் கரைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுபாடு விதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி திருவிழா இந்தாண்டு வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.
விழாவில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:
சுற்று சூழலக்கு மாசு ஏற்படாதபடியும், நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விழா கொண்டாட வேண்டும். களிமண்ணால் செய்த சிலைகள் உள்ளிட்ட சுற்று சூழல் பாதிக்காத மூலப்பொருள் கொண்டு செய்த விநாயகர் சிலைகள் பயன்படுத்த வேண்டும்.
நீர் சார்ந்த, மக்ககூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளை அழுகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்த அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை வழிபாட்டிற்கு பயன்படுத்த கூடாது. சிலைகள் அலங்கரிப்புக்கு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல், ரசாயன பொருட்கள், சாயங்கள் பயன்படுத்தக் கூடாது.
ஒரு முறை பயன்படுத்தி துாக்கியெறிக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கப், கரண்டிகள் மற்றும் உறிஞ்சி குழாய்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.