/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் நகராட்சியில் பேனர் வைக்க கட்டுப்பாடு
/
திருக்கோவிலுார் நகராட்சியில் பேனர் வைக்க கட்டுப்பாடு
திருக்கோவிலுார் நகராட்சியில் பேனர் வைக்க கட்டுப்பாடு
திருக்கோவிலுார் நகராட்சியில் பேனர் வைக்க கட்டுப்பாடு
ADDED : ஜூன் 21, 2025 11:39 PM
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் நகராட்சியில் அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்கோவிலுார் நகராட்சியில் பஸ் நிலையம் அருகே, நான்கு முனை, ஐந்து முனை சந்திப்பு என பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது. இதனால், விபத்துகள், கடை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நகராட்சி கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கமிஷனர் திவ்யா முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஜெய பிரகாஷ், நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் செழியன், போலீசார், கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இனி வரும் நாட்களில் நகராட்சி அனுமதி பெற்று மட்டுமே பேனர்கள் வைக்க வேண்டும். பேனர் வைத்த நாட்களில் இருந்து 6 தினங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்களே அதனை அகற்றிக் கொள்ள வேண்டும். அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்கள் போலீசாரின் உதவியுடன் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.