/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம்
/
ஓய்வு பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : அக் 14, 2024 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட கிளை செயற்குழு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி சங்க நடவடிக்கைகள் மற்றும் டிட்டோ - ஜாக் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், டிட்டோ - ஜாக் போராட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட்டார நிர்வாகிகள் அய்யாசாமி, செல்வராசு, முத்துசாமி, சீனிவாசன், சேரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.