/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2025 08:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அன்பழகன் தலைமை தாங்கினார். சுப்ரமணியன், ஆரோக்கியசாமி, சுப்பராயன் முன்னிலை வகித்தனர். ஜாகீர் உசேன், ஓய்வூதியர் சங்க செயலாளர் ராஜேந்திரன், சின்னப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.