/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2026 06:05 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் குணசேகரன் பேசினார்.
சங்கராபுரம் ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் சாமிதுரை, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், வட்டார தலைவர் அமுதா மற்றும் வட்ட செயலாளர் அருளப்பன், நிர்வாகிகள் பரனபாஸ், ஆரோக்கியசாமி, சின்னப்பன், விஜயகுமார் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

