/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வருவாய் துறை நிவாரண பொருட்கள் வழங்கல்
/
வருவாய் துறை நிவாரண பொருட்கள் வழங்கல்
ADDED : டிச 07, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு வருவாய் துறை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதியில் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருவாய்த் துறை மூலம் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சர்க்கரை நிவாரண பொருட்களை ஆர்.டி.ஓ., லுார்துசாமி வழங்கினார்.
வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை, மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், ஊராட்சி தலைவர் பரமசிவம், வி.ஏ.ஓ., முருகன் உடனிருந்தனர்.