/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

ADDED : ஆக 14, 2025 12:53 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துாய்மைப்பணியாளர்கள் நல வாரியம் சார்பில் துாய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு துாய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ. ஜீவா, துாய்மைப் பணியாளர் நலவாரியத் துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன், நலவாரிய உறுப்பினர் அரிஷ் குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நலவாரியத் தலைவர் ஆறுச்சாமி பேசியதாவது;
துாய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலம் துாய்மைப் பணியாளர்களுக்கு ரூ.4.34 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக சேர வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துாய்மைப் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
அதனை கண்காணிப்பதற்கு வாரிய உறுப்பினர் நியமிக்கப்படுவார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியில் மாலை 3:00 மணி அளவில் துாய்மைப் பணியாளர்கள் குறைதீர் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என பேசினார்.