/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனைத்து துறை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
/
அனைத்து துறை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
அனைத்து துறை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
அனைத்து துறை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : செப் 15, 2025 02:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து துறைகளின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். தொழில்நுட்பக் கல்வி ஆணையரான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், முதல்வரின் முகவரித்துறை, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கல்லுாரிக் கனவு, பிளஸ் 2 முடித்து கல்லுாரியில் சேராமல் இருக்கும் மாணவர்கள், அதற்கான காரணம், மாணவர்களை கல்லுாரியில் சேர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்தது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணவும், துறை வாரியாக மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், முடிவுற்றப் பணிகளை தொடர்ந்து பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.