/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
/
பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : டிச 08, 2025 05:37 AM
கள்ளக்குறிச்சி: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
வாணாபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு வாக்காளர் பதிவு அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். தாசில்தார் வெங்கடேசன், தேர்தல் துணை தாசில்தார் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் 306 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், 28 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடி மையங்களின் விபரங்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீசாரிடம் வழங்கி, நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் கடந்த தேர்தலின் போது நடந்த பிரச்னைகள், தற்போதைய நிலை, வரும் தேர்தலிலும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பர். தேர்தலின்போது பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருந்தால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இல்லையெனில் பதற்றமான ஓட்டுச்சாவடி பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
அதேபோல், வருவாய்த்துறை அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்வர். தொடர்ந்து, பூத் ஏஜெண்டகளுக்கான ஆலோசனை கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்தும், அதில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

