/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் ஒன்றியம் இரண்டாக பிரிப்பு வாணாபுரம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள்
/
ரிஷிவந்தியம் ஒன்றியம் இரண்டாக பிரிப்பு வாணாபுரம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள்
ரிஷிவந்தியம் ஒன்றியம் இரண்டாக பிரிப்பு வாணாபுரம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள்
ரிஷிவந்தியம் ஒன்றியம் இரண்டாக பிரிப்பு வாணாபுரம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள்
ADDED : ஜன 03, 2026 05:07 AM
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து 22 ஊராட்சிகள் ரிஷிவந்தியத்திற்கும், 38 ஊராட்சிகள் வாணாபுரம் ஒன்றியத்திற்கும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், ரிஷிவந்தியம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து வானபுரம் ஒன்றியம் உருவாக்கப்படும், ரிஷிவந்தியம் ஊராட்சியில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ரூ. 6.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து ரிஷிவந்தியம் மற்றும் வானாபுரம் ஒன்றியங்களில் எந்தெந்த ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் அந்தியூர், அவிரியூர், கீழ்ப்பாடி, குன்னியூர், லா. கூடலூர், மண்டகப்பாடி, மேலப்பழங்கூர், முட்டியம், முனிவாழை, நுாரோலை, பழைய சிறுவங்கூர், பள்ளிப்பட்டு, பாசார், பாவந்துார், பேரால், பிரிவிடையாம்பட்டு, ரிஷிவந்தியம், சாத்தபுத்துார், சித்தால், சூளாங்குறிச்சி, வெங்கலம், வேளானந்தல் ஆகிய 22 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளது.
வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அரியலுார், ஆர்கவாடி, அரும்பரம்பட்டு, அத்தியூர், எடுத்தனுார், இளையனார்குப்பம், ஈருடையாம்பட்டு, ஓந்தல், ஜம்படை, கடம்பூர், கடுவனுார், கள்ளிப்பாடி, காணாங்காடு, கரையாம்பாளையம், மையனுார், மணியந்தல், மரூர், ஒடியந்தல், பாக்கம், பெரிய கொள்ளியூர், பெரிய பகண்டை, பொற்பாலம்பட்டு, சீர்பாதநல்லுார், சீர்பனந்தல், சிறுபனையூர், சுத்தமலை, தொழுவந்தாங்கல், திருவரங்கம், வடமாமாந்துார், வானபுரம், யால், அத்தியந்தல், தேவரடியார்குப்பம், ஜம்பை, காங்கியனுார், மேலந்தல், முருகம்பாடி, சித்தப்பட்டிணம் ஆகிய 38 ஊராட்சிகள் உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

