/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முப்பெரும் விழா
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முப்பெரும் விழா
ADDED : பிப் 13, 2024 06:05 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் கல்லுாரியில் முப்பெரும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் கல்லுாரியில் உறுதிமொழியேற்பு, ஒயிட்கோட் மற்றும் பிரியாவிடை ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தனர். ெஹல்த் சயின்ஸ் கல்லுாரி முதல்வர் சரண்யாதேவி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா பங்கேற்று, செவிலியர்களின் பணிகள், சுகாதார ஆய்வாளர்களின் முக்கியத்தும் மற்றும் சமூக அக்கறை குறித்து பேசி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி பேராசிரியர்கள் மேகலை, லோகு, ராணி, ராஜேஸ்வரி, சண்முகசுந்தரி, சாந்தி இந்து, ஆனந்தபிரியா, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் பவுலின் சங்கீதா நன்றி கூறினார்.