/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., பள்ளி மாணவர்கள் துாய்மைப்பணி
/
ஆர்.கே.எஸ்., பள்ளி மாணவர்கள் துாய்மைப்பணி
ADDED : மார் 10, 2026 03:43 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் பள்ளி இளஞ்செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் ஒருநாள் துாய்மைப்பணி முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ். மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜே.ஆர்.சி., மற்றும் ஸ்கவுட் இயக்க மாணவர்கள், சேலம் மாவட்டம் ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் துாய்மைப்பணிகளை மேற்கொண்டர். முகாமில் ஜே.ஆர்.சி., மற்றும் என்.சி.சி., மாணவர்கள் 200 பேர் பங்கேற்றனர்.
பள்ளி முதல்வர் தனலட்சுமி மாணவர்களை வழி நடத்தினார். கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் கோவிலின் வரலாறு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பள்ளியின் ஆசிரியர்கள் சத்தியராஜ், சித்ரா, சரசு, சந்தோஷ்குமார், ராகேல் ஜாய்மேரி முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பள்ளியின் பொறுப்பாசிரியர் உலகநாதன், ஆசிரியர்கள் ரவி, அகிலாண்டேஸ்வரி, இன்பரசி பங்கேற்றனர்.

