/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி காட்டுமன்னார்கோவிலில் சாலை மறியல்
/
கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி காட்டுமன்னார்கோவிலில் சாலை மறியல்
கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி காட்டுமன்னார்கோவிலில் சாலை மறியல்
கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி காட்டுமன்னார்கோவிலில் சாலை மறியல்
ADDED : டிச 26, 2024 06:59 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், மோதல் சம்பவத்தை தொடர்ந்து ஒருவர் உயிரிழந்ததால், கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடியை சேர்ந்தவர் கருணாகரன், 42; இவரது மகன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நள்ளிரவில் திடீரென கருணாகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
மோதலின்போது தாக்கப்பட்டதால் கருணாகரன் இறந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்ததால், கொளக்குடி பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார், கருணாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருணாகரன் மகள் காயத்திரி, கொலை வழக்கு பதிவு செய்ய கோரி, காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு கருணாகரன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொளக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. அப்போது உறவினர்கள், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆம்புலன்சை வழிமறித்து ரம்ஜான் தைக்கால் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் சிதம்பரம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி., விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் கொலை வழக்கு பதிவது குறித்து முடிவு செய்யப்படும் என, கூறியதை ஏற்று கலைந்து சென்றனர். இதனால் சிதம்பரம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

