ADDED : ஏப் 16, 2025 11:55 PM

கச்சிராயபாளையம்; கல்வராயன் மலையில் ரூ. 3 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது.
கல்வராயன் மலையில் உள்ள சேராப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குரும்பலுார் ஏரிக்கரை இடையே உள்ள மண் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்த அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து மரக்கன்று நட்டார்.
பி.டி.ஓ. ஜோசப்ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி, ஊராட்சி தலைவர்கள் குப்புசாமி, சின்னக்கண்ணு, செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வராஜ், மல்லர்ராஜ்குமார், ஆத்மா குழு தலைவர் வெங்கடேசன், உதவி பொறியாளர்கள் அருண்ராஜா, கோபி, பணி மேற்பார்வையாளர் கோபி உட்பட பலர் பங்கேற்றனர்.