/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : பிப் 15, 2024 10:11 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்து, சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.ஊர்வலத்தில் பங்கேற்ற சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் வளைவில் முந்தாதே, வாழ்க்கையை குறைக்காதே, மிதவேகம் மிக நன்று, போதையில் பயணம் பாதையில் மரணம், தலைக்கவசம் அணிவீர், உயிரிழப்பை தவிர்ப்பீர் உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு சென்றனர்.
நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜன், கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர்கள் மணிமொழி, ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் சுதாகர், ராஜேஷ், சுவேதா, கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.