/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 15, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், கல்லுாரி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
உழவர் சந்தை அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., மகேஷ், கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் ஸ்ரீ விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் பஸ் நிலையம், சென்னை சாலை, காவல் நிலையம் வரை சென்றடைந்தது.

