/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பாதுகாப்பு பணி கலெக்டர் அறிவுறுத்தல்
/
சாலை பாதுகாப்பு பணி கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 26, 2025 06:24 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் இழப்புகளைதடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு நடவடிக்கைகள், சாலை ஓரங்களில் தானியங்கள் உலர்த்துதல் மற்றும் அவற்றை தடுத்தல் தொடர்பான பணிகள் குறித்து, கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும் வேகத் தடைகள் மற்றும் ஒளிரும் சமிக்கை விளக்குகள் அமைத்தல், சாலையோர விளக்குகள் அமைத்தல், பாதுகாப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் எச்சரிக்கை பலகை மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தினசரி கண்காணிக்கவும், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக வேகத்தடை, சாலை தடுப்புகளை ஏற்படுத்தவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் சாலையோர பேனர்கள், ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். சாலைகள், சாலையோரங்களில் வேளாண் விளைபொருட்களை உலர்த்துதலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில், டி.ஆர்.ஓ., ஜீவா, ஆர்.டி.ஓ., லுார்துசாமி, சப் கலெக்டர் ஆனந்த்குமார்சிங், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய பாஸ்கரன், சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் அருண்கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.