/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன் மலையில் சாலை பணி துவக்கம்
/
கல்வராயன் மலையில் சாலை பணி துவக்கம்
ADDED : மார் 29, 2025 05:14 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில், ரூ.1.90 கோடி மதிப்பில் புதிதாக சாலை அமைக்கும் பணி துவங்கியது.
கல்வராயன்மலை, இன்னாடு ஊராட்சிக்குட்பட்ட பொரசம்பட்டு கிராம மக்கள் புதிதாக தார் சாலை அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தினர். இந்நிலையில் அங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்டத்தில், ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி தலைமை தாங்கி பணிகளை துவங்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் சந்திரன், வன அலுவலர் சந்தோஷ், பி.டி.ஓ., ஜோசப் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
உதவி பொறியாளர் அருண் ராஜா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், சின்னத்தம்பி, ஊராட்சி தலைவர்கள் ரத்தினம், செல்வராஜ், ஆண்டி, சின்ன பொண்ணு, ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாமலை, செல்லதுரை, மின்னல் கொடிசக்திவேல், அறிவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.