/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை பணி தடுத்து நிறுத்தம்: கிராம மக்கள் சாலை மறியல் உளுந்துார்பேட்டை அருகே பரபரப்பு

ADDED : ஆக 29, 2025 03:00 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சாலைப் பணியை தனி நபர் தடுத்து நிறுத்தியதால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கொரட்டங்குறிச்சி - கிளாப்பாளையம் இடையே 3 கி.மீ., துாரத்திற்கு தார் சாலை பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் கிளாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிமலை, 56; என்பவர் சாலை அமைக்கப்படும் இடத்தில் 351 மீட்டர் இடம் தனக்கு சொந்தமானது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என சாலை பணியை தடுத்து நிறுத்தினார்.
இதனை அறிந்த கிளாப்பாளையம் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், சாலை பணியை தடுத்து நிறுத்தக்கூடாது எனக் கூறி நேற்று காலை 9:30 மணியளவில் கிளாப்பாளையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாலுார் போலீசார், பி.டி.ஓ., செந்தில் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன ர்.
அதன் பேரில் மதியம் 1:00 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.