/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாணாபுரம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
/
வாணாபுரம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
வாணாபுரம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
வாணாபுரம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜன 24, 2025 11:19 PM

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் பயணிகள் நிழற்குடை அருகே சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
வாணாபுரம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் இருந்தது. பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை இருந்ததால், புதிய பயணிகள் நிழற்குடை கட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, பழுதடைந்த பழைய நிழற்குடை அகற்றப்பட்ட நிலையில், அருகே இருந்த அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டியது தெரிந்தது. ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றுமாறு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பகண்டைகூட்ரோடு போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. அப்போது, தாசில்தார் பாலகுரு, பி.டி.ஓ., துரைமுருகன், ஊராட்சி தலைவர் தீபா அய்யனார், மண்டல துணை தாசில்தார் வினோத் பாபு, வருவாய் ஆய்வாளர் மரிவாளன், வி.ஏ.ஓ., ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.

