சாலையோரம் தேங்கிய மழை நீர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றம்
சாலையோரம் தேங்கிய மழை நீர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றம்
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
சின்னசேலம்: சின்னசேலத்தில் சாலையோரம் தேங்கிய மழை நீர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கழிவு நீர் கால்வாய் வழியாக அகற்றப்பட்டது.
சின்னசேலம் நகரில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் சாலையோரம் மழை நீர் தேங்கி நின்றது.
இதனால் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், சாலை அமைக்கும் பணிகளுக்கும் இடையூறாக இருந்ததால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோரது முன்னிலையில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் புதியதாக அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது.
