/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை; கள்ளக்குறிச்சியில் துணிகரம்
/
சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை; கள்ளக்குறிச்சியில் துணிகரம்
சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை; கள்ளக்குறிச்சியில் துணிகரம்
சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை; கள்ளக்குறிச்சியில் துணிகரம்
ADDED : மார் 15, 2025 08:19 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் சூப்பர் மார்க்கெட்டில், 1.45 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஷபீர், 37; இவர், கச்சிராயபாளையம் சாலையில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். நேற்று காலை 7:00 மணியளவில் ஷபீர், சூப்பர் மார்க்கெட்டை திறந்து பார்த்தபோது, கல்லாவில் வைக்கப்பட்ட 1.45 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க, அதன் வயரை துண்டித்து, 'ஹார்ட் டிஸ்க்'கை எடுத்து சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, தடய அறிவியல் நிபுணர்கள் தட்சணாமூர்த்தி, ஜெய்சங்கர் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.