ADDED : ஜூலை 10, 2025 02:44 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த குடும்ப விழாவில், போலியோ தடுப்பு நடவடிக்கைக்கு அதிக நிதி வழங்கிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, போலியோவிற்கு அதிக நிதி வழங்கிய பள்ளி மற்றும் மாணவர்களை பாராட்டும், ஆண்டு குடும்ப விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதிக நிதி வழங்கிய வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா வித்யாலயா, சாரதா வித்யாஷ்ரம், ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, கேடயம் மற்றும் சான்றிதழ்களை, ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் வழங்கினார்.
சங்க செயலாளர் கோதம்சந்த், சாசன தலைவர் வாசன் முன்னிலை வகித்தனர்.
சங்க நிர்வாகிகள் காமராஜ், ராஜேஷ்குமார், சாந்திபால், நடராஜன், ராமலிங்கம், மகாவீர், வசந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முத்துக்குமாரசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.