/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருமண மண்டபத்தில் ரூ .1 லட்சம் திருட்டு
/
திருமண மண்டபத்தில் ரூ .1 லட்சம் திருட்டு
ADDED : பிப் 16, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருமணத்தில் மொய் பணத்தை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த கச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி சாந்தி, 48; இவரது மகன் சதீஷ்க்கு கடந்த 10ம் தேதி, திருக்கோவிலுார், கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.
அப்போது, மொய் பணம் ஒரு லட்சம் ரூபாயை பையில் வைத்திருந்தார். அவரது அருகில் இருந்த அமர்ந்திருந்த மர்ம பெண், ரூபாய் வைத்திருந்த பையை திருடிச் சென்றார். புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

