/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் உதவி
/
தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் உதவி
ADDED : பிப் 19, 2025 04:49 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கட்டுமான தொழிலா ளர் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார்.
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மற்றும் விபத்து மரணம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதியுதவிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.
பின், 18 பயனாளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவித் தொகை வழங்கி பேசுகையில், 'கடந்த 2022ம் ஆண்டு முதல் 23 ஆயிரத்து 163 கட்டுமான தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையும், 23 ஆயிரத்து 212 கட்டுமான தொழிலாளர்களுக்கு 11 கோடியே 19 லட்சத்து 48 ஆயிரத்து 644 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.