/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட ஒதுக்கீடு ரூ.112 கோடி! நான்கு வழி சாலை திட்டத்தால் நகரின் வளர்ச்சியில் வேகம்
/
திருக்கோவிலுாரில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட ஒதுக்கீடு ரூ.112 கோடி! நான்கு வழி சாலை திட்டத்தால் நகரின் வளர்ச்சியில் வேகம்
திருக்கோவிலுாரில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட ஒதுக்கீடு ரூ.112 கோடி! நான்கு வழி சாலை திட்டத்தால் நகரின் வளர்ச்சியில் வேகம்
திருக்கோவிலுாரில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட ஒதுக்கீடு ரூ.112 கோடி! நான்கு வழி சாலை திட்டத்தால் நகரின் வளர்ச்சியில் வேகம்
ADDED : ஜூலை 08, 2025 10:52 PM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார்- அரகண்டநல்லுார் இடையே தென்பெண்ணை ஆற்றில்,தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்குரூ.112 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியாகி உள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருக்கோவி லுாரையும், மணம்பூண்டி யையும் இணைக்கும் வகையில் காமராஜர் காலத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது. அதன் வாழ்நாளையும் கடந்து தற்பொழுதும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. அதிகரித்து வரும் வாகன போக்குவரத்திற்கு இப்பாலம் ஈடுகொடுக்க முடியவில்லை. இதன் உறுதித் தன்மையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட பாலத் திற்கு முன்பாக, திருக் கோவிலுாரையும் -அரகண் டநல்லுாரையும் இணைக்கும் வகையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைபாலம் காட்டாற்று வெள்ளத்தில் அவ்வப்பொழுது பழுதடைந்ததால் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.
விவசாயிகள், மார்க்கெட் கமிட்டிக்கு விளை பொருட்களை எடுத்துச் செல்வதற்காக, தரைபாலம் அவ்வப்பொழுது ஓரளவிற்கு சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்லும் வகையில் இருந்து வந்தது.
எனவே தரைப் பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் நிறைவு காலத்தில், அப்போதைய முதல்வர் பழனிச்சாமி, 110 விதியின் கீழ், திருக்கோவிலுார் அரகண்டல்லுார் இணைக்கும் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதற்கான எந்த பணியும் நடக்க வில்லை.
பொன்முடி எம்.எல்.ஏ., தரைப்பாளத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற வாக்குறுதியுடன் தேர்தலை சந்தித்தார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கி அதற்கான அரசாணை வெளியாகி உள்ளது.
ரூ.112.07 கோடி மதிப்பில் கடலுார் சித்துார் சாலை யில், தென் பெண்ணை ஆற்றில் தரை பாலத்துக்கு மாற்றாக உயர்மட்ட பாலம் கட்டுடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருக்கோவிலுார் தீயணைப்பு நிலையத்தில் துவங்கி புறவழிச்சாலையை இணைக் கும் அய்யனார் கோயில் வரை 2.3 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை யாக மாற்ற ரூ.15 கோடி ரூபாயும், 5 முனை சந்திப்பிலிருந்து செல்லும் செவலை ரோடு, 7 மீட்டர் அகலத்திற்கு, 2 கி.மீ., துாரத்திற்கு இருவழிச் சாலையாக அகலப்படுத்தி, பாலங்கள் கட்ட ரூ.3.46 கோடி ஒதுக்கி அரசாணை வெளியாகி உள்ளது.
நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் மூலம் திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பெருமளவில் பயனடைவர்.
பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில்; மேம்பாலம் கட்டுவதிற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளதால், உடனடியாக டெண்டர் வெளியிடப்படும்.
ஒப்பந்தம் கோரப்பட்டு 3 மாதத்திற்குள் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிவித்தனர்.