/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.1.14 கோடி வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.1.14 கோடி வர்த்தகம்
ADDED : ஜூன் 02, 2025 11:01 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 1.14 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கமிட்டிக்கு, எள் 1,000 மூட்டை, மக்காச்சோளம் 1,000, கம்பு 30, சிவப்பு சோளம், உளுந்து தலா 10 மூட்டை, வேர்க்கடலை 5, ராகி 2, ஆமணக்கு ஒரு மூட்டை என மொத்தம் 2,058 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
சராசரியாக, ஒரு மூட்டை எள் 8,949 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,257, கம்பு 2,351, சிவப்பு சோளம் 3,239, உளுந்து 4,649, வேர்க்கடலை 7,651, ராகி 3,039, ஆமணக்கு 4,650 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு கோடியே 14 லட்சத்து 4 ஆயிரத்து 243 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 110 மூட்டை, வரகு 25, வேர்க்கடலை ஒரு மூட்டை, விரலி மஞ்சள் 5 மூட்டை என 161 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,251 ரூபாய், வரகு 1,826, எள் 10,971 வேர்க்கடலை 9,298, மற்றும் விரலி மஞ்சள் 12,609 ரூபாய் என 6 லட்சத்து 50 ஆயிரத்து 171 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 168 மூட்டை, எள் 47, மக்காச்சோளம் 25, கம்பு 16, உளுந்து 3, ராகி ஒரு மூட்டை என 260 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
சராசரியாக நெல் 2,150 ரூபாய், எள் 9,786, மக்காச்சோளம் 2,250, கம்பு 2,402, உளுந்து 5,700, ராகி 3,100 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 833 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.