/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.1.15 கோடி வர்த்தகம்
/
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.1.15 கோடி வர்த்தகம்
ADDED : மே 13, 2025 11:58 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில், ரூ.1.15 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
கமிட்டிக்கு, எள் 1,200 மூட்டை; மக்காச்சோளம் 100; உளுந்து 40; கம்பு 30; ராகி 2; மணிலா, பச்சைப்பயிர் தலா ஒரு மூட்டை என மொத்தம்,1,374 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் நேற்று முன்தினம் கொண்டு வந்தனர்.
சராசரியாக, ஒரு மூட்டை எள் - ரூ.9,205; மக்காச்சோளம் ரூ.2,316; உளுந்து ரூ. 4,954; கம்பு ரூ.2,539; ராகி ரூ.3,509; மணிலா ரூ.8,109; பச்சைப்பயிர் ரூ. 2,539; என கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக, 1 கோடியே 15 லட்சத்து 70 ஆயிரத்து 156 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
அதேபோல, சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 40 மூட்டை; எள் 24; உளுந்து ஒரு மூட்டை மற்றும் உருண்டை மஞ்சள் 15 மூட்டை என மொத்தம் 80 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ. 2,373; எள் ரூ.10,542; உளுந்து ரூ.5,151; உருண்டை மஞ்சள் ரூ.11,009; என மொத்தமாக 5 லட்சத்து 19 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 204 மூட்டை; எள் 65; கம்பு 23; உளுந்து 8; ராகி 4 மூட்டை என மொத்தம் 304 மூட்டை விளைபொருட்கள் விற்னைக்காக கொண்டு வரப்பட்டது. சராசரியாக நெல் ரூ.2,100; எள் ரூ. 9,985; கம்பு ரூ.2,509; உளுந்து ரூ.7,100; ராகி ரூ.3,421; என கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக 11 லட்சத்து 48 ஆயிரத்து 705 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.