/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
/
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
ADDED : ஏப் 02, 2025 05:51 AM
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பெருவளூரை சேர்ந்த சேஷாத்திரி மனைவி அமுதா, 45; இவர் கடந்த மார்ச்., 30ம் தேதி வீட்டை பூட்டி விட்டு புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 லட்சம் பணம் காணாமல் போனது தெரிந்தது.
இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.