/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கார் மெக்கானிக் பட்டறையில் ரூ.1.50 லட்சம் திருட்டு
/
கார் மெக்கானிக் பட்டறையில் ரூ.1.50 லட்சம் திருட்டு
கார் மெக்கானிக் பட்டறையில் ரூ.1.50 லட்சம் திருட்டு
கார் மெக்கானிக் பட்டறையில் ரூ.1.50 லட்சம் திருட்டு
ADDED : செப் 21, 2025 05:02 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கார் மெக்கானிக் பட்டறையில் ரூ.1.50 லட்சம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்து, 28; மெக்கானிக். இவர், கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் புறவழிச்சாலையில் கார் மெக்கானிக் பட்டறை வைத்துள்ளார்.
நேற்று காலை 10:00 மணியளவில் பட்டறையை திறந்து பார்த்தபோது, 'கார் ஜாக்கி' மூலம் ெஷட்டர் திறந்த நிலையில் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த கார் விற்ற பணம் 1.50 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித் தனர்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.